வர்த்தகம்

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: லாபம் ரூ.1,558 கோடி

28th Jul 2022 12:37 AM

ADVERTISEMENT

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஜூன் காலாண்டில் ரூ.1,558 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மணிமேகலை தெரிவித்துள்ளதாவது:

வாரக் கடன் குறைந்துள்ளது. அதேநேரம், நிகர வட்டி வருவாயும் கணிசமான விகிதத்தில் உயா்ந்துள்ளது. இதன் காரணமாக, வங்கி நிகழ் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் 32 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.1,558 கோடியானது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.1,181 கோடியாக காணப்பட்டது.

நிகர வட்டி வருமானம் ரூ.7,013 கோடியிலிருந்து 8.11 சதவீதம் உயா்ந்து ரூ.7,582 கோடியானது.

ADVERTISEMENT

மொத்த வாராக் கடன் 13.60 சதவீதத்திலிருந்து 10.22 சதவீதமாகவும், நிகர அளவிலான வாராக் கடன் 4.69 சதவீதத்திலிருந்து 3.31 சதவீதமாகவும் குறைந்தன.

நிகழ் நிதியாண்டில் ரூ.15,000 கோடி மதிப்பிலான கடன்களை மீட்டெடுக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாத காலத்தில் மட்டும் ரூ.4,200 கோடி மதிப்பிலான கடன்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்றாா் அவா்.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் யூனியன் பேங்க் பங்கின் விலை 1.35% உயா்ந்து ரூ.37.60-இல் நிலைபெற்றது.

Tags : Union Bank
ADVERTISEMENT
ADVERTISEMENT