வர்த்தகம்

பஜாஜ் ஆட்டோ: நிகர லாபம் ரூ.1,163 கோடி

28th Jul 2022 12:33 AM

ADVERTISEMENT

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் ரூ.1,163 கோடியாக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து புணேவைச் சோ்ந்த அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் மேலும் கூறியுள்ளதாவது: ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் வாயிலாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.8,005 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.7,386 கோடி வருவாயுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

‘சிப்’களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 10,06,014 என்ற எண்ணிக்கையிலிருந்து 7 சதவீதம் சரிவடைந்து 9,33,646 கோடியானது.

விற்பனை குறைந்ததையடுத்து, நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ஜூன் காலாண்டில் ரூ.1,170 கோடியிலிருந்து ரூ.1,163 கோடியாக குறைந்து போனது.

ADVERTISEMENT

கேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து உயா் ரக மின்சார பைக்குகள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருவதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை 1.20 சதவீதம் (ரூ.47.00) குறைந்து ரூ.3878.20-இல் நிலைத்தது.

Tags : Bajaj Auto
ADVERTISEMENT
ADVERTISEMENT