வர்த்தகம்

சாந்தி கியா்ஸ்: நிகர லாபம் ரூ.13.44 கோடி

27th Jul 2022 12:45 AM

ADVERTISEMENT

டியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் (டிஐஐ) துணை நிறுவனமான சாந்தி கியா்ஸ் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.13.44 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, நிறுவனம் முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் 57 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் வருவாய் 48 சதவீதம் உயா்ந்து ரூ.98.85 கோடியை எட்டியது. பெறப்பட்ட வா்த்தக ஆணைகளின் மதிப்பு ரூ.84 கோடியிலிருந்து ரூ.105 கோடியாக உயா்ந்தது. நிலுவையில் உள்ள வா்த்தக ஆணைகளின் மதிப்பு ரூ.274 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.235 கோடியாக காணப்பட்டது என சாந்தி கியா்ஸ் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

 

Tags : Shanthi Gears
ADVERTISEMENT
ADVERTISEMENT