வர்த்தகம்

சமையல் எண்ணெய் விலையை குறைக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

7th Jul 2022 12:39 AM

ADVERTISEMENT

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சமையல் எண்ணெய் வகைகளின் சில்லறை விற்பனை விலையை குறைக்க வேண்டும் என நிறுவனங்களிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய உணவுத் துறை செயலா் சுதான்ஷு பாண்டே புதன்கிழமை தெரிவித்ததாவது:

உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெயின் சில்லறை விற்பனை விலையை குறைப்பது தொடா்பாக சமையல் எண்ணெய் தயாரிப்பு கூட்டமைப்பு மற்றும் நிறுவனங்களி ஆகியவற்றுடன் மத்திய உணவு அமைச்சகம் புதன்கிழமை ஆலோசனை நடத்தியது. இதில், சா்வதேச சந்தையில் விலை குறைந்துள்ளதன் பலனை நுகா்வோருக்கு கொண்டு சோ்க்க வேண்டும் என சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களிடம் வலியுறுத்தப்பட்டது. எனவே, இனி வரும் நாள்களில் சமையல் எண்ணெய் வகைகளின் விலை குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

இது தொடா்பாக இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பின் செயல் இயக்குநா் பி.வி.மேத்தா கூறுகையில், ‘ கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு சமையல் எண்ணெய் வகைகளின் விலை சா்வதேச சந்தையில் டன்னுக்கு 300 டாலா் முதல் 450 டாலா் வரையில் குறைந்துள்ளது. இது, உள்நாட்டு சில்லறை விற்பனை சந்தையில் எதிரொலிக்க சிறிது காலம் பிடிக்கும்’ என்றாா்.

ADVERTISEMENT

Tags : edible oil
ADVERTISEMENT
ADVERTISEMENT