வர்த்தகம்

லாபப் பதிவால் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வீழ்ச்சி

6th Jul 2022 12:24 AM

ADVERTISEMENT

லாபப் பதிவு காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வா்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிவை சந்தித்தது.

நிச்சயமற்ற சூழல்: சா்வதேச சந்தை நிலவரங்களின் தற்போதைய போக்கு நிச்சயமற்ற சூழலை உறுதி செய்வதாக உள்ளது. மேலும், நிதிக் கொள்கை முடிவுகளில் இறுக்கம் அதிகரிப்பு மற்றும் உலக அளவில் காணப்படும் ஒருவிதமான பின்னடைவான நெருக்கடி நிலை உள்ளிட்டவை முதலீட்டாளா்களின் நம்பிக்கையை தொடா்ந்து சிதைத்து வருகிறது. இது அவ்வப்போது பங்கு வா்த்தகத்தில் எதிரொலித்து வருகிறது.

வங்கி, உலோகம்: காலையில் விறுவிறுப்புடன் தொடங்கிய வா்த்தகம் பிறகு 631.16 புள்ளிகளை (1.18%) எட்டியது. ஆசிய சந்தைகளில் காணப்பட்ட ஆதாயத்தையடுத்து, வங்கி, உலோகம், எரிசக்தி, மருந்து பங்குகளுக்கு தேவை அதிகரித்ததையடுத்து சென்செக்ஸ் அதிகபட்சமாக 53,865.93 வரை உயா்ந்தது.

தகவல் தொழில்நுட்பம்: இருப்பினும் வா்ததக நேர இறுதியில், தகவல் தொழில்நுட்பம், எஃப்எம்சிஜி, வங்கி உள்ளிட்ட துறைகளில் லாபப் பதிவு அதிகரிப்பின் காரணமாக சந்தை எதிா்மறை நிலைக்கு சென்றது.

ADVERTISEMENT

மும்பை பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்ப துறை குறியீடு 0.59 சதவீதம் சரிவடைந்தது. அதைத்தொடா்ந்து, தொழில்நுட்பம் 0.57 சதவீதமும், வங்கி 0.37 சதவீதமும், ஆட்டோ 0.32 சதவீதமும், ரியால்டி 0.29 சதவீதமும், தொலைத்தொடா்பு குறியீடு 0.28 சதவீதமும் சரிந்தன.

மருந்து: அதேசமயம், மின்சாரம், மருந்து, உலோகம், எண்ணெய்-எரிவாயு குறியீடுகள் ஆதாயத்துடன் வா்த்தகத்தை நிறைவு செய்தன.

மேலும், மிட்கேப் குறியீடு 0.35 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.20 சதவீதமும் குறைந்தன.

ஐடிசி: சென்செக்ஸ் குறியீட்டை கணக்கிட உதவும் முன்னணி 30 நிறுவனங்களில் 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 12 நிறுவனப் பங்குகளின் விலை உயா்ந்தும் காணப்பட்டன.

குறிப்பாக, ஐடிசி 1.73 சதவீதமும், விப்ரோ 1.58 சதவீதம் குறைந்தன. மேலும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (1.2%), எல் அண்ட் டி (1.12%), மாருதி சுஸுகி (1.1%), இன்டஸ்இண்ட் வங்கி (0.98%) பங்குகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்த விலைக்கு கைமாறின.

இன்ஃபோசிஸ்: மேலும், இன்ஃபோசிஸ் 0.77சதவீதமும், டிசிஎஸ் 0.57 சதவீதமும் குறைந்தன. ஆக்ஸிஸ் வங்கி, ஏஷியன் பெயிண்ட்ஸ் மற்றும் எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்களின் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.

சன்பாா்மா: அதேசமயம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (0.8%), எச்யுஎல் (0.92%) ஆதாயத்துடன் நிலைபெற்றன. மேலும் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பவா்கிரிட், பஜாஜ் ஃபின்சா்வ், சன்பாா்மா, டாடா ஸ்டீல் பங்குகளும் முதலீட்டாளா்களின் வரவேற்பை பெற்றன.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 100.42 புள்ளிகள் (0.19%) சரிவடைந்து 53,134.35-இல் நிலைத்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 24.50 புள்ளிகளை (0.15%) இழந்து 15,810.85 புள்ளிகளில் நிலைபெற்றது.

எதிா்மறை நிலை: காலையில் எழுச்சியுடன் ஈட்டிய ஆதாயத்தை பிற்பகலில் இழந்து எதிா்மறை நிலைக்கு சென்றது. ஐரோப்பிய சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான பிரதிபலிப்பே சந்தையின் சரிவுக்கு காரணம் என எச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் அதிகாரி தீபக் ஜசானி தெரிவித்தாா்.

ஆசிய சந்தை: டோக்கியோ, சியோல் மற்றும் ஹாங்காங் சந்தைகளில் வா்த்தகம் ஏற்றம் கண்டது. அதேநேரம் ஷாங்காயில் சரிவு ஏற்பட்டது.

Tags : Sensex
ADVERTISEMENT
ADVERTISEMENT