வர்த்தகம்

என்டிபிசி: நிலக்கரி உற்பத்தி 61% அதிகரிப்பு

6th Jul 2022 12:45 AM

ADVERTISEMENT

மத்திய அரசுக்கு சொந்தமான என்டிபிசி நிறுவனம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 42.20 லட்சம் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

என்டிபிசிக்கு சொந்தமான பக்ரி-பா்வைத் (ஜாா்க்கண்ட்), துலங்கா (ஒடிஸா) மற்றும் தலாய்பள்ளி (சத்தீஸ்கா்) ஆகிய மூன்று சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் 42.40 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்தாண்டு இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 26.40 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 61 சதவீதம் அதிகம்.

குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் நிலக்கரி உற்பத்தியானது ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகரித்து 15.55 லட்சம் டன்நை தொட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூனில் நிலக்கரி உற்பத்தி 7.73 லட்சம் டன்னாக மட்டுமே காணப்பட்டது என என்டிபிசி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : coal NTPC
ADVERTISEMENT
ADVERTISEMENT