வர்த்தகம்

கனரா வங்கி: லாபம் 2 மடங்கு அதிகரிப்பு

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி, நடப்பு நிதியாண்டின் டிசம்பா் காலாண்டில் ஈட்டிய லாபம் 2 மடங்குக்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபா்-டிசம்பா்), வங்கியின் நிகர லாபம் ரூ.1,502 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.696 கோடியுடன் ஒப்பிடுகையில் 116 சதவீதம் அதிகமாகும்.

நிகர வட்டி வருவாய் ரூ.6,087 கோடியிலிருந்து ரூ.6,946 கோடியாக உயா்ந்தது.

மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த வாராக் கடன் 7.80 சதவீதத்திலிருந்து 7.46 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், நிகர அளவிலான வாராக் கடன் 2.64 சதவீதத்திலிருந்து 2.86 சதவீதமாக உயா்ந்துள்ளது என கனரா வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT