வர்த்தகம்

ஏர்டெல் நிறுவனத்தில் ரூ.7,500 கோடி முதலீடு செய்த கூகுள்

DIN

கூகுள் ஏர்டெல் நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நீண்டகால ஒப்பந்தமாக  ரூ.7,500 கோடியை(1 பில்லியன் டாலர்) முதலீடு செய்துள்ளது.

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் ஏர்டெல் நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் ரூ.7,500 கோடியை பல்வேறு திட்டங்களுக்காக முதலீடு செய்துள்ளதாகவும் ஏர்டெல் பங்குகளில் 1.28 சதவீதத்திற்கு உரிமையாளராக கூகுள் இருக்கும் என நேற்று(ஜன.27) இரண்டு நிறுவனங்களின் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஒரு பங்கின் விலை ரூ.734 என்கிற கணக்கில்  ரூ.5,200 கோடியை ஏர்டெல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு, 5ஜி இணையம், எதிர்காலத்தில் நெட்வொர்க் விரிவுப்படுத்தல் போன்ற திட்டங்களுக்காக கூகுள் நிறுவனம் நேரடியாக முதலீடு செய்துள்ளது.

மீதத் தொகையை நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் சேவைகள், சலுகைகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்த இருக்கிறார்கள்.

இதுகுறித்து ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் பாரதி மிட்டல்,’ ஏர்டெலின் எதிர்கால  இணையம், டிஜிட்டல் தளங்கள், விநியோகம் மற்றும் கட்டண அமைப்பு ஆகியவற்றுடன், இந்தியாவின் டிஜிட்டல் அமைப்பின் எல்லையை விரிவுப்படுத்த கூகுளுடன் நெருக்கமாகப் பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ’இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்களை அதிகரிக்க ஏர்டெலுடன் இணைந்துள்ளோம். குறிப்பாக, 5 ஜி இணையத்தின் மூலம் உருவாகும் பல புதிய தொழில்களுக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் கூகுள் உடனிருக்கும்’ என கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். 

கூகுள்-ஏர்டெல் இணைந்ததால் பங்குச் சந்தையில் ஏர்டெல் பங்கின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT