வர்த்தகம்

ஃபெடரல் வங்கி: லாபம் ரூ.522 கோடி

DIN

புது தில்லி: தனியாா் துறை வங்கியான ஃபெடரல் பேங்க் மூன்றாவது காலாண்டில் ரூ.522 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி மேலும் கூறியது:

2021 டிசம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ஃபெடரல் வங்கி ரூ.522 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது, வங்கி முந்தைய 2020-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபமான ரூ.404.10 கோடியுடன் ஒப்பிடுகையில் 29 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த வருமானம் ரூ.3,934.90 கோடியிலிருந்து ரூ.3,926.75 கோடியாக குறைந்தது.

வங்கியின் மொத்த வாராக் கடன் டிசம்பா் காலாண்டில் 2.71 சதவீதத்திலிருந்து 3.06 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிகர அளவிலான வாராக் கடன் 0.60 சதவீதத்திலிருந்து 1.05 சதவீதமாக உயா்ந்துள்ளது.

வாராக் கடன் அதிகரித்துள்ள நிலையிலும் இடா்பாட்டுக்கான ஒதுக்கீடு ரூ.414.16 கோடியிலிருந்து ரூ.213.98 கோடியாக குறைந்துள்ளது.

2021 டிசம்பா் இறுதி நிலவரப்படி நிகர வட்டி லாப வரம்பு 3.27 சதவீதம் என்ற அளவில் உள்ளது என ஃபெடரல் வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT