வர்த்தகம்

கரடிப் பிடியில் சிக்கிய பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் இழப்பு

DIN

இந்த வாரத்தின் முதல் நாளிலிலிருந்து கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வந்த  சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் 1,100 புள்ளிகளை இழந்துள்ளது.

கடந்த வாரத்திலிருந்து கடும் சரிவைச் சந்தித்து வரும் பங்குச் சந்தை வணிகம் இன்று காலை முதல் பெரும் வீழ்ச்சியை அடைந்து வருகிறது. சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் இழந்து வர்த்தகமாகிக் கொண்டிருப்பதால் பங்குதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று (ஜன.26) 57,858.15 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,317.38 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு        எண்ணான சென்செக்ஸ் (11.00 மணி நிலவரப்படி) 1,101 புள்ளிகளை இழந்து 56,756.96 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல், 17,277.95 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,062.00 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 333 புள்ளிகள் சரிந்து 16,944.40 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT