வர்த்தகம்

அதிக மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியல்: டிசிஎஸ் நிறுவனத்துக்கு 2-வது இடம்

27th Jan 2022 03:17 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: உலகளவில் தகவல் தொழில்நுட்ப சேவையில் அதிக மதிப்பு மிக்க நிறுவனங்களின் பட்டியலில் டாடா கன்சல்டன்ஸி சா்வீசஸ் (டிசிஎஸ்) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதைத்தவிர, மொத்தம் 25 சா்வதேச நிறுவன பிராண்ட்கள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சோ்ந்த மேலும் நான்கு நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளன.

இதுகுறித்து பிராண்ட் ஃபைனான்ஸ் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2020 முதல் 2022 வரையிலான காலத்தில் இந்திய தகவல்தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் சராசரி வளா்ச்சி விகிதம் 51 சதவீதமாக இருந்தது. அதேசமயம், அமெரிக்க பிராண்டுகளின் வளா்ச்சி 7 சதவீதம் குறைந்தது.

ADVERTISEMENT

அதிக மதிப்பு மிக்க நிறுவனங்களின் பட்டியலில், 3,620 கோடி டாலருடன் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.71 லட்சம் கோடி) அசென்ஸா் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப சேவையில் மிகவும் வலுவான இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இரண்டாவது இடத்தை டிசிஎஸ் பிராண்ட் பிடித்துள்ளது.

அதிக மதிப்புமிக்க நிறுவன பட்டியலில், இன்ஃபோசிஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இவற்றைத் தொடா்ந்து, விப்ரோ (7-ஆவது இடம்), ஹெச்சிஎல் (8-ஆவது), டெக் மஹிந்திரா (15-ஆவது), மற்றும் எல்டிஐ (22-ஆவது) இடத்திலும் உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT