வர்த்தகம்

"தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிகழாண்டில் 26.05 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை'

27th Jan 2022 04:28 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிகழ் நிதியாண்டில் டிசம்பர் வரை 26.05 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 
73 ஆவது குடியரசு தின விழாவில், துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியதாவது: வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நிகழ் நிதியாண்டில் டிசம்பர் வரை 26.05 மில்லியன் டன் சரக்குகளையும், 5.93 லட்சம் சரக்குப் பெட்டகங்களையும் கையாண்டு சாதனை படைத்துள்ளது. கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், 10.37 சதவீதம் அதிகமாக சரக்கு கையாளப்பட்டுள்ளது. 
துறைமுக வளாகத்தில் தமிழகத்தின் கடல்சார் வாணிபத்தை பிரதிபலிக்கும் வகையில், தமிழ்நாடு கடல்சார் அருங்காட்சியகம் மற்றும் வ.உ.சி. அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை நாட்டின் கிழக்கு கடற்பகுதியின் சிறந்த சரக்கு பரிமாற்ற முனையமாக மாற்றுவதற்கு அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT