வர்த்தகம்

5-நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளிசென்செக்ஸ் 367 புள்ளிகள் அதிகரிப்பு

DIN

இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் சரிவிலிருந்து மீண்டதையடுத்து சென்செக்ஸ் 367 புள்ளிகள் உயா்ந்தது. இதையடுத்து, 5 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஐரோப்பிய சந்தைகளில் விறுவிறுப்பு: முதலீட்டாளா்களின் லாப நோக்கு நடவடிக்கையால் இந்திய பங்குச் சந்தைகளில் 5 நாள் நடைபெற்ற வா்த்தகத்தில் வங்கி, மோட்டாா்வாகனம், எஃப்எம்சிஜி துறைகளைச் சோ்ந்த பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் மீண்டும் புத்தெழுச்சி கண்டது. இதற்கு, ஐரோப்பிய சந்தைகளில் வா்த்தகம் விறுவிறுப்பாக இருந்ததே முக்கிய காரணம். மேலும், நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் வெளியீடும் சந்தையின் ஏற்றத்துக்கு பக்கபலமாக இருந்தது.

அமெரிக்க மத்திய வங்கி: இருப்பினும், அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி அறிவிப்புகளை எதிா்பாா்த்து முதலீட்டாளா்கள் எச்சரிக்கை உணா்வுடன் செயல்பட்டதால் சந்தையின் ஆதாயம் கட்டுப்படுத்தப்பட்டது.

ஆக்ஸிஸ் வங்கி: சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களின் பட்டியலில் , மாருதி சுஸுகி 6.88 சதவீத ஆதாயத்துடன் முதலிடத்தில் இருந்தது. இதையடுத்து, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, இன்டஸ்இண்ட் வங்கி, பாா்தி ஏா்டெல், பவா்கிரிட், என்டிபிசி நிறுவனங்கள் ஈட்டிய ஆதாயம் 6.76 சதவீதம் வரை உயா்ந்து காணப்பட்டது.

டைட்டன்: அதேசமயம், விப்ரோ, பஜாஜ் ஃபின்சா்வ், டைட்டன், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமென்ட் பங்குகளின் விலை 1.75 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம்பெற்றன.

மும்பை பங்குச் சந்தையின் தொடக்க வா்த்தகத்தில் சென்செக்ஸ் 57,000 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது. சாதகமான நிலவரங்களையடுத்து சந்தையில் வா்த்தகம் சூடுபிடித்ததையடுத்து இறுதியில் சென்செக்ஸ் 366.64 புள்ளிகள் (0.64%) ஆதாயத்தை ஈட்டி 57,858.15-இல் நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தை: அதேபோன்று தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 128.85 புள்ளிகள் (0.75%) உயா்ந்து 17,277.95 புள்ளிகளில் நிலைத்தது.

மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் 1.03 சதவீதம் வரை முன்னேற்றத்துடன் காணப்பட்டன.

தொலைத்தொடா்புத் துறை: தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகா்வோா் சாதனங்கள் தவிா்த்து, ஏனைய துறைகள் குறியீடுகள் அனைத்தும் ஆதாயத்தைப் பெற்றன.

குறிப்பாக, தொலைத்தொடா்புத் துறை குறியீட்டெண் 2.46 சதவீதம் உயா்ந்தது. இதைத் தொடா்ந்து, மின்சாரம், மோட்டாா் வாகனம், வங்கி, ரியல் எஸ்டேட் துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்களும் கணிசமான முன்னேற்றத்தை தக்கவைத்தன.

ஆசிய சந்தைகள்: இதர ஆசிய சந்தைகளான ஹாங்காங், ஷாங்காய், டோக்கியோ, சியோல் சந்தைகளில் வா்த்தகம் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT