வர்த்தகம்

ஏற்றத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 366 புள்ளிகள் உயர்வு

25th Jan 2022 03:49 PM

ADVERTISEMENT

தொடர் வீழ்ச்சியிலிருந்த பங்குச் சந்தை வணிகம் இன்று ஏற்றத்தில் நிறைவடைந்துள்ளது.

கடந்த வாரத்திலிருந்து கடும் சரிவைச் சந்தித்து வரும் பங்குச் சந்தை வணிகம் இன்று காலை முதல் தடுமாறினாலும் மிதமான ஏற்றத்தை அடைந்து நிறைவடைந்துள்ளது.

நேற்று திங்கள்கிழமை (ஜன.24) 57,491.51 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,158.63 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 366.64 புள்ளிகள் அதிகரித்து 57,858.15 புள்ளிகளில் நிலைபெற்றது.

அதேபோல், 17,149.10 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,001.55 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 128.85 புள்ளிகள் உயர்ந்து 17,277.95 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

ADVERTISEMENT

இருப்பினும் கடந்த ஜன-17 முதல் நேற்று வரையிலான பங்குச் சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் 3,500 புள்ளிகளையும் , நிஃப்டி 1,200 புள்ளிகளையும் இழந்ததால் முதலீட்டாளர்கள் 17.50 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க| ’ரெட்மி நோட் 11 எஸ்’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

ADVERTISEMENT
ADVERTISEMENT