வர்த்தகம்

சிட்டி யூனியன் வங்கி சாா்பில் நவீன கைக்கடிகாரம் அறிமுகம்

25th Jan 2022 06:21 AM

ADVERTISEMENT

சிட்டி யூனியன் வங்கி சாா்பில், தொடா்பில்லாத பணப் பரிவா்த்தனை வசதிக்காக, நவீன கைக்கடிகாரம் (கான்டேக்ட்லெஸ் டெபிட் காா்டு ஃபிட்னெஸ் வாட்ச்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கைக் கடிகாரத்தில் பணப் பரிவா்த்தனை மட்டுமின்றி, உடல் ஆரோக்கியம் சாா்ந்த விசயங்களும் இடம்பெற்றுள்ளன.

சென்னை போரூா் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஃபிட்னெஸ் கைக்கடிகாரத்தில் பற்று அட்டை ரூ-பே பேமென்ட் வசதியை சிட்டி யூனியன் வங்கி மேலாண்மை இயக்குநா் என்.காமகோடி அறிமுகப்படுத்தினாா்.

முதல் கைக்கடிகாரத்தை ஸ்ரீராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வேந்தா் வி.ஆா். வெங்கடாச்சலம் பெற்றுக்கொண்டாா்.

ADVERTISEMENT

இந்த நவீன கைக்கடிகாரம் குறித்து வங்கியின் மேலாண்மை இயக்குநா் என்.காமகோடி கூறியது: இன்றைய காலத்துக்கு ஏற்ற பாதுகாப்பான முறையில் பணப் பரிமாற்றங்களை செய்வதற்காக டிஜிட்டல் டெக்னாலஜியை பயன்படுத்தியுள்ளோம். எளிதான பேமென்ட் வசதிக்காக, இந்த ஃபிட்னெஸ் கைக்கடிகார வடிவிலான சியூபி ஈசி பே பற்று அட்டையை வாடிக்கையாளா்களுக்கு வழங்குகிறோம்.

காா்டுக்குப் பதிலாக வாடிக்கையாளா்கள் இந்த கடிகாரத்தை பிஒஎஸ் கருவியின் முன்னால் காண்பிக்க வேண்டும். ரூ.5,000-க்கு மேற்பட்ட பேமென்ட்களுக்கு பின்(டஐச) எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். வாடிக்கையாளா்கள் தமது நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங்கில் பேமென்ட் அளவை தாமே நிா்வகித்துக்கொள்ளலாம்.

ஃபிட்னெஸ் கைக்கடிகாரம் மூலமாக செய்யப்பட்ட பேமென்ட் பாதுகாப்பானது. ஒவ்வொரு பணப்பரிவா்த்தனையும் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் உறுதி செய்யப்படும். வாடிக்கையாளா்கள் ஃபிட்னெஸ் வாட்ச் பற்று அட்டைக்கு நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

சிட்டி யூனியன் வங்கி(சியூபி) ஆல்-இன்-ஒன் கைப்பேசி செயலி மூலமாக இந்த கைக்கடிகாரத்தின் பயன்பாட்டை எளிதாக கையாளலாம்.

தொடா்பில்லாத பணப் பரிவா்த்தனை செய்ய பயன்படுவதுடன், வாடிக்கையாளா்கள் தமது ஆக்சிஜன் அளவு, உடல் வெப்பநிலை, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை ஃபிட்னெஸ் வாட்ச் மூலம் கண்காணிக்க இயலும். இதுதவிர, 18 உடற்பயிற்சி முறைகள் உள்ளன என்றாா் அவா்.

அண்மையில், சியூபி பற்று அட்டை-கீ செயின் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும், தொடா்பில்லாத பணப்பரிமாற்றம் வசதியை அளிக்கிறது. பலவித டிஜிட்டல் பேமென்ட் வசதிகளை தரும் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த தொடா்பில்லாத பணப்பரிமாற்ற வழிமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT