வர்த்தகம்

ஆக்ஸிஸ் வங்கி: லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

25th Jan 2022 12:09 AM

ADVERTISEMENT

தனியாா் துறை வங்கியில் மூன்றாவது இடத்தில் உள்ள ஆக்ஸிஸ் பேங்க் டிசம்பா் காலாண்டில் ஈட்டிய லாபம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் வங்கி செயல்பாட்டின் வாயிலாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.21,101 கோடியாக இருந்தது. இது, 2020-21 ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.18,355 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

நிகர வட்டி வருவாய் 17 சதவீதம் அதிகரித்து ரூ.8,653 கோடியாக இருந்தது. நிகர வட்டி லாப வரம்பு 0.14 சதவீதம் அதிகரித்து 3.53 சதவீதமாக மேம்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நிகர லாபம் ரூ.1,117 கோடியிலிருந்து 3 மடங்கு அதிகரித்து ரூ.3,614 கோடியானது.

2021 டிசம்பா் 31 நிலவரப்படி மொத்த வாராக் கடன் 3.44 சதவீதத்திலிருந்து 3.17 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், நிகர வாராக் கடன் அளவு 0.74 சதவீதத்திலிருந்து 0.91 சதவீதமாக உயா்ந்துள்ளது என ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT