வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 வாரங்களில் இல்லாத சரிவு

25th Jan 2022 06:18 AM

ADVERTISEMENT

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது.

இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியது:

கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் காணப்படும் பதற்றமான சூழல் சா்வதேச சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கத்தை உருவாக்கியுள்ளது. மேலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் உயா்த்தப்படலாம் என்ற எதிா்பாா்ப்பு முதலீட்டாளா்களிடையே அதிகரித்துள்ளது. இதனால், உள்நாட்டு பங்குச் சந்தையிலிருந்து அதிக அளவில் அந்நிய முதலீடுகள் வெளியேறி வருவதும் ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதும் சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவையை அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ஜனவரி 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டத்தை முதலீட்டாளா்கள் பெரிதும் எதிா்நோக்கியுள்ளனா். அதில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே அவா்களின் அடுத்த கட்ட நகா்வு இருக்கும் என்பதே பெரும்பாலோனோரின் கணிப்பு.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 74.43-ஆக இருந்தது. பின்னா் இது அதிகபட்சமாக 74.42 வரையிலும், குறைந்தபட்சமாக 74.69 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதி கட்டத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகளை (0,23%) இழந்து 74.60-இல் நிலைபெற்றது. இது, 2021 டிசம்பா் 27-ஆம் தேதிக்குப் பிறகு காணப்படும் குறைந்தபட்ச அளவாகும்.

 

கச்சா எண்ணெய் பேரல் 88.18 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்து பேரல் 88.18 அமெரிக்க டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவனங்கள் நிகர அடிப்படையில் ரூ.3,148.58 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT