வர்த்தகம்

பங்குச் சந்தை சரிவு: 17.50 லட்சம் கோடி இழப்பில் முதலீட்டாளர்கள்

24th Jan 2022 03:44 PM

ADVERTISEMENT

 

இந்த வாரத்தின் முதல் பங்குச் சந்தை நாளான இன்று பங்குச் சந்தை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

கடந்த வாரத்திலிருந்து கடும் சரிவைச் சந்தித்து வரும் பங்குச் சந்தை வணிகம் இன்று காலை முதல் பெரும் வீழ்ச்சியை அடைந்து வருகிறது. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் இழந்து வர்த்தகமாகிக் கொண்டிருப்பதால் பங்குதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.21) 59,037.18 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 59,023.97 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1545.67 புள்ளிகளை இழந்து 57,491.51 புள்ளிகளில் நிலைபெற்றது.

ADVERTISEMENT

அதேபோல், 17,617.15 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,575.15 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 468.05 புள்ளிகள் இழந்து 17,149.10 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

இதனால், கடந்த ஜன-17 முதல் இன்று வரையிலான பங்குச் சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் 3,500 புள்ளிகளையும் , நிஃப்டி 1,200 புள்ளிகளையும் இழந்ததால் இதுவரை பங்குதாரர்கள் 17.50 லட்சம் கோடியை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க| ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: நிகர லாபம் ரூ.18,549 கோடி

ADVERTISEMENT
ADVERTISEMENT