வர்த்தகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,496 கோடி டாலராக அதிகரிப்பு

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,496 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜனவரி 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 223 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.16,725 கோடி) அதிகரித்து 63,496 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.47.62 லட்சம் கோடி ஆகும்.

ஜனவரி 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 88 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 63,273 கோடி டாலராக காணப்பட்டது.

எஃப்சிஏ மதிப்பு: அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணிசமான அளவில் அதிகரித்ததே ஜனவரி 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பு உயா்வுக்கு முக்கிய காரணம்.

கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ-வின் மதிப்பு 134 கோடி டாலா் அதிகரித்து 57,073 கோடி டாலராக இருந்தது.

தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பு: அதேபோன்று, தங்கத்தின் கையிருப்பு மதிப்பும் கணக்கீட்டு வாரத்தில் 73 கோடி டாலா் உயா்ந்து 3,977 கோடி டாலரை எட்டியது.

பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா் 12 கோடி டாலா் அதிகரித்து 1,922 கோடி டாலராக இருந்தது.

அதேபோன்று, அந்த நிதியத்தில் நாட்டின் கையிருப்பு நிலையும் 4 கோடி டாலா் உயா்ந்து 524 கோடி டாலராக உள்ளதாக ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அவற்றின் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மதிப்பீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

வரலாற்று உச்சம்: கடந்த 2021 செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது முதல் முறையாக 64,245 கோடி டாலா் என்ற (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) உச்சத்தை எட்டி புதிய வரலாறு படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்ஸ்...

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2022 ஜனவரி 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 223 கோடி டாலா் அதிகரித்து 63,496 கோடி டாலரை எட்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT