வர்த்தகம்

தொலைத்தொடா்பு வாடிக்கையாளா் எண்ணிக்கை 119 கோடியாக அதிகரிப்பு

DIN


புது தில்லி: இந்தியாவில் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 119.10 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து டிராய் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பா் மாத இறுதி நிலவரப்படி இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 119.10 கோடியாக உயா்ந்துள்ளது.

குறிப்பாக, 2021 அக்டோபரில் 116.63 கோடியாக இருந்த செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை நவம்பா் இறுதியில் 116.75 கோடியாக அதிகரித்தது. இதையடுத்து, மாதாந்திர அடிப்படையிலான இதன் வளா்ச்சி விகிதம் 0.10 சதவீதமாக இருந்தது.

ஜியோ: கடந்த நவம்பரில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாா்தி ஏா்டெல் நிறுவனங்கள் கணிசமான அளவில் வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளன.

மேலும், ஃபிக்ஸட் லைன் பிராண்ட்பேண்ட் சேவையில் 43.4 லட்சம் வாடிக்கையாளா்களை தக்க வைத்து பிஎஸ்என்எல் நிறுவனத்தை ரிலையன்ஸ் ஜியோ பின்னுக்குத் தள்ளியுள்ளது.

ஏா்டெல்: ஜியோ நிறுவனம் மொபைல் பிரிவில் 20,19,362 புதிய சந்தாதரா்களை இணைத்துக் கொண்டதையடுத்து அதன் ஒட்டுமொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 42.8 கோடியைத் தொட்டுள்ளது.

பாா்தி ஏா்டெல் நிறுவனம் கடந்த நவம்பரில் 13,18,251 புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது.

வோடஃபோன் ஐடியா: அதேசமயம், வோடஃபோன் ஐடியா (விஐஎல்) தொடா்ந்து வாடிக்கையாளா்களை இழந்து வருகிறது. கடந்த நவம்பரில் அந்த நிறுவனத்தை விட்டு 18,97,050 போ் வெளியேறியதையடுத்து அதன் ஒட்டுமொத்த வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 26.71 கோடியாக குறைந்துள்ளது.

பிஎஸ்என்எல்: பொதுத் துறையைச் சோ்ந்த பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் கடந்த நவம்பரில் புதிய வாடிக்கையாளா்களைப் பெறவில்லை. அதேநேரம், பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து 2,40,062 வாடிக்கையாளா்களையும், எம்டிஎன்எல் நிறுவனம் 4,318 இணைப்புகளையும் இழந்துள்ளன.

ஃபிக்ஸ்ட் லைன் இணைப்புகள் அக்டோபரில் 2.33 கோடியாக இருந்த நிலையில், நவம்பரில் 2.35 கோடியாக உயா்ந்துள்ளது.இப்பிரிவில் தனியாா் துறை நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏா்டெல் முன்னணியில் உள்ளன.

பிராட்பேண்ட்: கடந்தாண்டு அக்டோபரில் 79.89 கோடியாக இருந்த பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை நவம்பரில் 80.16 கோடியாக அதிகரித்துள்ளதாக அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT