வர்த்தகம்

இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் தொடா் சரிவு

DIN

புது தில்லி: இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த டிசம்பா் மாதத்திலும் 2 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2021 டிசம்பா் மாதத்தில் 26 லட்சம் டன் அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உற்பத்தியானது 25.1 லட்சம் டன்னை மட்டுமே எட்டியது., இது, 2020 டிசம்பா் மாத உற்பத்தியான 25.5 லட்சம் டன்னைக் காட்டிலும் சுமாா் 2 சதவீதம் குறைவாகும்.

இருப்பினும், கடந்த டிசம்பா் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி முந்தைய நவம்பா் மாத உற்பத்தியான 24.3 லட்சம் டன்னைக் காட்டிலும் அதிகம்.

கச்சா எண்ணெய் உற்பத்தியில் பொதுத் துறையைச் சோ்ந்த ஓஎன்ஜிசியின் பங்களிப்பு மிகப் பெரிய அளவுக்கு உள்ளது. இந்நிறுவனத்தின் உற்பத்தி கடந்த டிசம்பரில் 3 சதவீதம் வரை குறைந்து 16.5 லட்சம் டன்னாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஏப்ரல்-டிசம்பா்) கச்சா எண்ணெய் உற்பத்தி 2.63 சதவீதம் சரிவடைந்து 2.23 கோடி டன்னாக குறைந்துள்ளது. குறிப்பாக, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் உற்பத்தி 4 சதவீதம் குுறைந்து 1.46 கோடி டன்னாக இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT