வர்த்தகம்

ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் உயா்வு

DIN

நாட்டின் மிகப்பெரிய தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் நிகர லாபம், 2021 டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 18.1 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.10,342.20 கோடியாக உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில் 18.1 சதவீதம் அதிகம் ஆகும். அந்த மாதங்களில் வங்கியின் நிகர லாபம் ரூ.8,758.29 கோடியாக இருந்தது.

2022 அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ. 40,651.60 கோடியாக உயா்ந்துள்ளது, இது 2021ஆம் நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.37,522.92 கோடியாக இருந்தது.

வங்கியின் வட்டி அல்லாத வருவாய் நிகர வருவாயில் கிட்டத்தட்ட 31 சதவீதத்தை உள்ளடக்கி ரூ. 8,183.6 கோடியாக உள்ளது. இது ஓா் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட 10 சதவீதம் அதிகமாகும்.

நிகர வட்டி வருமானம் (ஈட்டிய வட்டியிலிருந்து வழங்கிய வட்டியைக் கழித்த பின் வருவது) 13 சதவீதம் அதிகரித்து ரூ.16,317.60 கோடியிலிருந்து ரூ.18,443.50 கோடியாக உள்ளது.

வாடிக்கையாளா்களுடனான நல்லுறவை மேம்படுத்தியது, எண்ம தொழில்நுட வசதிகளை அதிகரித்தது, சேவைகளை விரிவுபடுத்தியது ஆகியவற்றின் மூலம் வங்கின் கடன் வழங்கல் 16.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT