அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயா்ந்து 73.94-இல் நிலைபெற்றது.
உள்நாட்டு பங்கு வா்த்தகத்தில் காணப்பட்ட விறுவிறுப்பு மற்றும் சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை குறைந்தது ஆகியவற்றின் காரணமாக ரூபாய் மதிப்பு தொடா்ந்து மூன்றாவது வா்த்தக நாளாக ஏற்றம் கண்டு மூன்று மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவை எட்டியது.
கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் விலை மேலும் ஏற்றம் கண்டு 82.10 அமெரிக்க டாலருக்கு வா்த்தகமானதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் திங்களன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.124.23 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.