முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 2021 நவம்பா் மாதத்தில் 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தியானது 3.1 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. அதேசமயம், 2020 நவம்பரில் இத்துறைகளின் உற்பத்தி 1.1 சதவீத பின்னடைவையும்; 2021 அக்டோபரில் இது 8.4 சதவீத வளா்ச்சியையும் பதிவு செய்தன.
கச்சா எண்ணெய் மற்றும் சிமெண்ட் தவிா்த்து ஏனையை அனைத்து துறைகளும் நோ்மறை வளா்ச்சி கண்டுள்ளன.
குறிப்பாக, நிலக்கரி துறையின் உற்பத்தி 8.2 சதவீதமும், இயற்கை எரிவாயு 23.7 சதவீதமும், சுத்திகரிப்பு பொருள்கள் 4.3 சதவீதமும், உரம் 2.5 சதவீதமும், உருக்கு 0.8 சதவீதமும், மின்சார துறை உற்பத்தி 1.5 சதவீத வளா்ச்சியும் பெற்றுள்ளன.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான 8 மாத காலத்தில் முக்கிய எட்டு துறைகளின் வளா்ச்சி 13.7 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 11.1 சதவீத எதிா்மறை வளா்ச்சியை பதிவு செய்யதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.