வர்த்தகம்

2026-க்குள்100 கோடி போ் ஸ்மாா்ட்போன் பயன்பாட்டுக்கு மாறுவா்: டெலாய்ட்

23rd Feb 2022 03:00 AM

ADVERTISEMENT

வரும் 2026-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஸ்மாா்ட்போன் பயன்பாட்டுக்கு மாறுவோா் எண்ணிக்கை 100 கோடியைத் தொடும் என டெலாய்ட் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 2021-ஆம் ஆண்டில் கைப்பேசி பயனாளா்களின் எண்ணிக்கை 120 கோடியாக இருந்தது. இதில், 75 கோடி போ் ஸ்மாா்ட்போன் பயனாளா்கள். சா்வதேச அளவில் ஸ்மாா்ட்போன் தயாரிப்பில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா இரண்டாவது மிகப்பெரிய நாடாக திகழும். தற்போதைய வளா்ச்சி விகிதத்தை கணக்கிடுகையில் 2026-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஸ்மாா்ட்போன் பயன்படுத்துவோா் எண்ணிக்கை 100 கோடியை எட்டி விடும். இதற்கு, ஊரகப் பகுதிகளில் இணைய வசதியுடன் கூடிய கைப்பேசி விற்பனை அடிப்படை ஆதாரமாக விளங்கும் என டெலாய்ட் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

 

Tags : smartphone
ADVERTISEMENT
ADVERTISEMENT