வர்த்தகம்

டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் மீண்டும் தேர்வு

11th Feb 2022 11:55 AM

ADVERTISEMENT

இந்தியாவின் மிகப்பெரிய குழுமமான டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன்(58) மீண்டும்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டாடா சன்ஸ் குழுமத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு இணைந்து 2017-இல் தலைவராக நியமிக்கப்பட்டவர் என்.சந்திரசேகரன்.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் இவருடைய பங்களிப்பு திருப்தி அளித்ததால் இன்று நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டத்தில் டாடா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் ரத்தன் டாடா ஒப்புதலில் என்.சந்திரசேகரனை மீண்டும்  டாடா சன்ஸ் தலைவராக தேர்வுசெய்துள்ளனர்.

டாடா ஸ்டீல், டாடா பவர், டிசிஎஸ் போன்ற நிறுவனங்களைக் கண்காணிக்கும் என்.சந்திரசேகரனின் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளில் பங்குதாரர்கள் மத்தியில் ஏற்பட்ட நம்பிக்கையால் அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT