வர்த்தகம்

தங்கம் ஈ.டி.எஃப்.  திட்டங்களில் ரூ.4,814 கோடி முதலீடு

11th Feb 2022 02:50 AM

ADVERTISEMENT


புது தில்லி: தங்கம் ஈ.டி.எஃப். திட்டங்களுக்கு கடந்த 2021 மீண்டுமொரு சாதகமான ஆண்டாக அமைந்தது. சந்தை மதிப்பு உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாக இவ்வகை முதலீட்டு திட்டங்கள் ரூ.4,814 கோடியை ஈர்த்துள்ளன. 
இருப்பினும், இது, முந்தைய 2020-ஆம் ஆண்டில் இவ்வகை திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ரூ.6,657 கோடி முதலீட்டுடன் ஒப்பிடுகையில் இது குறைவான அளவே ஆகும். 
கடந்த 2020-ஆம் ஆண்டில் தங்க நிதியங்கள் நிர்வகித்து வந்த சொத்துகளின் மதிப்பு ரூ.14,174 கோடியாக இருந்தது. இது, 2021 டிசம்பர் இறுதியில் 30 சதவீத வளர்ச்சி கண்டு ரூ.18,405 கோடியை 
எட்டியது. மேலும், தங்கம் ஈ.டி.எஃப். திட்டங்களில் உள்ள முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கையும் 8.87 லட்சத்திலிருந்து 32.09 லட்சமாக அதிகரித்துள்ளதாக இந்திய பரஸ்பர நிதிய கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT