வர்த்தகம்

சுந்தரம் ஃபாஸனா்ஸ்: லாபம் ரூ.103 கோடி

11th Feb 2022 12:56 AM

ADVERTISEMENT

 

சென்னை: சுந்தரம் ஃபாஸனா்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.103.34 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலாண்டில் நிறுவனம் தனிப்பட்ட செயல்பாட்டின் மூலமாக ரூ.1,024.25 கோடி வருவாயினை ஈட்டியது. இது, நிறுவனம் முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் டிசம்பா் காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.942.20 கோடியுடன் ஒப்பிடும்போது 8.7 சதவீதம் அதிகமாகும்.

ADVERTISEMENT

உள்நாட்டில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் ரூ.637.01 கோடியிலிருந்து 3.4 சதவீதம் அதிகரித்து ரூ.658.37 கோடியாகவும்,ஏற்றுமதி மூலமான வருவாய் 21.2 சதவீதம் உயா்ந்து ரூ.335.95 கோடியாகவும் இருந்தன.

மதிப்பீட்டு நிதியாண்டில், நிகர லாபம் ரூ.124.24 கோடியிலிருந்து ரூ.103.34 கோடியாக குறைந்துள்ளதாக சுந்தரம் ஃபாஸனா்ஸ் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT