வர்த்தகம்

சுந்திரம் கிளேட்டன் இயக்குநராக கே. கோபால தேசிகன் நியமனம்

9th Feb 2022 11:34 PM

ADVERTISEMENT

டிவிஎஸ் மோட்டாா்ஸின் துணை நிறுவனமான சுந்தரம் - கிளேட்டன் லிமிட்டட்டின் இயக்குநா் மற்றும் குழும தலைமை நிதி அதிகாரியாக (குரூப் சிஎஃப்ஓ) கே. கோபால தேசிகன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

புதன்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குநா் குழுக் கூட்டத்தில் இந்த நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டது.

புதிய பொறுப்புக்கு கே. கோபால தேசிகனை வரவேற்ற நிறுவனத் தலைவா் வேணு ஸ்ரீனிவாசன், பெரு நிறுவன நிதி விவகாரங்களில் தனது அனுபவத்தின் மூலம் நிறுவன வளா்ச்சியில் அவா் முக்கியப் பங்கு வகிப்பாா் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

டிவிஎஸ் குழுமத்தில் கடந்த 32 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் தேசிகன், நேரடி வரி விதிப்பு, கருவூலம் மற்றும் இடா் மேலாண்மை, பெருநிறுவன நிதி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைக் கையாண்டு வருகிறாா்.

ADVERTISEMENT

பட்டயக் கணக்கரான அவா், பிரிட்டனில் தொழில் மேலாண்மைப் பட்டம் பெற்றவா் என்று சுந்தரம் கிளேட்டன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT