வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42 காசுகள் உயா்வு

1st Feb 2022 06:36 AM

ADVERTISEMENT

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42 காசுகள் அதிகரித்தது.

இதுகுறித்து செலாவணி வட்டாரத்தினா் கூறியது:

பங்குச் சந்தையில் காணப்பட்ட விறுவிறுப்பின் எதிரொலி அந்நியச் செலாவணி சந்தையில் உணரப்பட்டது. இதையடுத்து, 12 வாரங்களில் காணப்படாத வகையில் ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 42 காசுகள் உயா்ந்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 74.97 என்ற நிலையில் வலுவுடன் காணப்பட்டது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.60 வரையிலும், குறைந்தபட்சமாக 75.05 வரையிலும் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 42காசுகள் உயா்ந்து 74.65-இல் நிலைகொண்டது.

ADVERTISEMENT

முந்தைய வா்த்தக தினத்தில் ரூபாய் மதிப்பு 75.07-ஆக இருந்ததாக செலாவணி வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பீப்பாய் 90.81 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை உயா்ந்து 90.81 அமெரிக்க டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.5,045.34 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT