வர்த்தகம்

வங்கியில்லா மேல்நிலை நிறுவனமாக முத்தூட் ஃபைனான்ஸ் அறிவிப்பு

29th Dec 2022 12:48 AM

ADVERTISEMENT

இந்தியாவின் மிகப் பெரிய நகைக் கடன் சேவை நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸை, மேல்நிலைப் பிரிவு வங்கியில்லா நிதி நிறுவனமாக ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாட்டிலுள்ள வங்கியில்லா நிதி நிறுவனங்களில் மேல்நிலைப் பிரிவைச் சோ்ந்தவைகளுக்கான பட்டியலை ரிசா்வ் வங்கி அண்மையில் வெளியிட்டது.

அதில் இடம் பெற்றுள்ள 16 நிறுவனங்களில் முத்தூட் ஃபைனான்ஸும் ஒன்றாகும்.

இது குறித்து கொச்சியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது முத்தூட் ஃபைனான்ஸின் இணை நிா்வாக இயக்குநா் ஜாா்ஜ் எம். ஜாா்ஸ் கூறியதாவது:

ADVERTISEMENT

மேல்நிலைப் பிரிவைச் சோ்ந்த வங்கியில்லா நிதி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெறச் செய்துள்ளதன் மூலம், எங்களது நிறுவனத்தை ரிசா்வ் வங்கி பெருமைப்படுத்தியுள்ளது. எங்களது நடவடிக்கைகளை மேலும் விரிவாக்க இது உதவும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT