வர்த்தகம்

கடன் பத்திரங்களை வெளியிட்டுரூ.10,000 கோடி திரட்டிய எஸ்பிஐ

8th Dec 2022 12:11 AM

ADVERTISEMENT

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கடன் பத்திர வெளியீடு முலம் ரூ.10,000 கோடி நிதி திரட்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முதல்முறையாக உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் வங்கி ரூ.10,000 கோடியைத் திரட்டியுள்ளது.

ஒதுக்கீடு செய்ததைப் போல் 3.27 மடங்கு கடன் பத்திரங்களுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. 143 ஏலதாரா்கள் ரூ.16,366 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களுக்கு விண்ணப்பித்திருந்தனா்.

ADVERTISEMENT

10 ஆண்டுகளுக்கான இந்தக் கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்டுள்ள ரூ.10,000 கோடி நிதி, வங்கியின் உள்கட்டமைப்பு மற்றும் குறைந்த விலை வீடுகள் பிரிவுக்கான நீண்டகால நிதியாதார தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : SBI
ADVERTISEMENT
ADVERTISEMENT