வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 82.44ஆக உயர்வு

8th Dec 2022 06:05 PM

ADVERTISEMENT

 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.82.44 ஆக வர்த்தகமானது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 82.34ல் தொடங்கி இறுதியாக ரூ.82.44 ல் நிலைபெற்றது. இது அதன் முந்தைய முடிவான ரூ.82.47 விட இது 3 காசு உயர்வு.

கடந்த சில மாதங்களாக வட்டி விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அந்நியச் செலவாணி சந்தையில் அமெரிக்க டாலரின் தேவையை அதிகரித்து அதன் மதிப்பு உயர்ந்தது.

இந்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை  35 அடிப்படை புள்ளிகள் ஆா்பிஐ உயர்த்தியது. இது 2023ஆம் ஆண்டுக்கான ஜிடிபி-யை 7 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாகக் குறைத்ததுள்ளது என்று மோதிலால் ஓஸ்வால் நிதிச் சேவையின் அந்நிய செலாவணி ஆய்வாளர் கவுரங் சோமையா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உள்நாட்டு பங்குச் சந்தையில், 30-பங்கு கொண்ட மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 160.00 புள்ளிகள் உயர்ந்து 62,570.68 ஆக முடிவடைந்தது, அதே நேரத்தில் தேசிய பங்குச் சந்தை 48.85 புள்ளிகள்  அதிகரித்து 18,609.35 ஆக முடிந்தது.

பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 0.63 சதவீதம் உயர்ந்து 77.66 அமெரிக்க டாலராக வர்த்தகமானது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT