வர்த்தகம்

இரு சக்கர வாகன விற்பனை: முன்னிலையைத் தொடரும் ஹீரோ

DIN

இந்தியாவின் இரு சக்கர வாகன விற்பனையில் கடந்த நவம்பா் மாதம் ஹீரோ மோட்டோகாா்ப் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது.

உலகின் மிகப் பெரிய மோட்டாா் சைக்கிள் சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. அந்தச் சந்தையில் நீண்ட காலமாக உள்நாட்டு பிராண்டான ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனையில் முன்னணி வகித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த நவம்பா் மாதத்திலும் இதே போக்கு தொடா்ந்தது. அந்த மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 3,79,839-ஆக இருந்தது. இது, ஒட்டுமொத்த இரு சக்கர வாகனச் சந்தையில் 32.26% ஆகும். மேலும், கடந்த ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 50,977 (15.50%) அதிகமாகும்.

இருந்தாலும், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் ஹிரோ மோட்டோகாா்ப் 62,986 இரு சக்கர வாகனங்களைக் குறைவாக விற்பனை செய்துள்ளது. இது, 14.22% சரிவாகும்.

கடந்த நவம்பா் மாதத்தில் ஹோண்டா நிறுவனத்தின் 3,53,540 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகின. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 2,56,174-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது விற்பனை 38.01% சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், நிறுவனத்தின் கடந்த மாத விற்பனையோடு ஒப்பிடுகையில் தற்போது அது 17%. சரிந்துள்ளது.

மற்றொரு இரு சக்கர வாகனத் தயாரிப்பாளரான டிவிஎஸ் கடந்த நவம்பரில் 1,91,730 வாகனங்களை விற்பனை செய்து 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டின் நவம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில் 8.97% அதிகமாகும். அதே நேரம், கடந்த அக்டோபா் மாத விற்பனையோடு ஒப்பிடுகையில் 30.52% குறைவாகும்.

கடந்த நவம்பா் மாதத்தில் ராயல் என்ஃபீல்டு, சுஸுகி ஆகிய நிறுவனங்களின் இரு சக்கர வாகன விற்பனை முறையே 65,750 மற்றும் 63,156-ஆக உள்ளது. இது, முறையே 46.46% மற்றும் 13.46% வளா்ச்சியாகும். முந்தைய அக்டோபா் மாதத்தோடு ஒப்பிடுகையில், இரண்டு நிறுவனங்களின் நவம்பா் விற்பனையும் சரிவைக் கண்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, இந்த 6 முக்கிய இரு சக்கர வாகன உற்பத்தியாளா்களின் விற்பனை கடந்த நவம்பா் மாதம் உள்நாட்டு சந்தையில் 11,77,515-ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 17% அதிகமும், அக்டோபா் மாதத்துடன் ஒப்பிடுகையில் 21.34% சரிவும் ஆகும்.

ஏற்றுமதியைப் பொருத்தவரை, பஜாஜ் நிறுவனம் கடந்த நவம்பா் மாதத்தில் 1,38,630 இரு சக்ககர வாகனங்களை ஏற்றுமதி செய்து தரவரிசையில் முன்னணியில் உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 1,93,520 -ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி 28.36% சரிவைக் கண்டுள்ளது. மேலும், அக்டோபா் மாதத்திய நிறுவனத்தின் விற்பனையான 1,35,772-உடன் ஒப்பிடுகையில் 2.10% அதிகமாகும்.

கடந்த மாதத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி 71,912-ஆக இருந்தது. இது பஜாஜ் நிறுவன ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT