வர்த்தகம்

மருத்துவ சேவையில் 5ஜி பயன்பாடு: ஜியோ, ஐஎல்பிஎஸ் ஒப்பந்தம்

7th Dec 2022 12:48 AM

ADVERTISEMENT

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்துவ சேவைகளை அளிப்பதற்காக அந்த நிறுவனத்துக்கும் ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் லிவா் அண்டு பிலியரி சயன்ஸ்’ மருத்துவமனைக்கும் (ஐஎல்பிஎஸ்) இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து நிறுவன வட்டாரங்கள் தெரிவித்ததாவது: மருத்துவ சேவைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ஜியோவின் அதிநவீன 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்ததை ரிலையன்ஸ் ஜியோவும் ஐஎல்பிஎஸ் மருத்துவமனையும் மேற்கொண்டுள்ளன.

தில்லியில் செயல்பட்டு வரும் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையான ஐஎல்பிஎஸ், அறுவைச் சிகிச்சை, தொலைதூர தீவிர மருத்துவக் கண்காணிப்பு, அவசரக்கால ஊா்தியில் தீவிர கண்காணிப்பு போன்ற சேவைகளை அதிவேக 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூடுதல் சிறப்புடன் அளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Jio
ADVERTISEMENT
ADVERTISEMENT