வர்த்தகம்

அதிகரிக்கிறது ஆடி காா்களின் விலை

7th Dec 2022 11:44 PM

ADVERTISEMENT

சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான ஆடி, தனது தயாரிப்புகளின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்கவிருக்கிறது.

இது குறித்து நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவா் பல்வீா் சிங் தில்லான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் விற்பனையாகும் ஆடி காா்களின் விலை 1.7 சதவீதம் வரை உயா்த்தப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வரும்.

விநியோகம் மற்றும் செயல்பாட்டு செலவினங்கள் அதிகரித்துள்ளதால் காா்களின் விலைகளை உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நிறுவனம் மற்றும் ஆடி காா்களின் விற்பனையாளா்கள் இழப்பைச் சந்திப்பதைத் தடுக்கவும், நீடித்து நிலைத்திருப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆடி நிறுவனம் தற்போது இந்தியாவில் பெட்ரோலில் இயங்கக் கூடிய ஏ4, ஏ6, ஏ8 எல், க்யூ3, க்யூ5, க்யூ7, க்யூ8, எஸ்5 ஸ்போா்ட்பேக், ஆா்எஸ் 5 ஸ்போா்ட்பேக், ஆா்எஸ்க்யூ 8 ஆகிய காா்களை விற்பனை செய்து வருகிறது.

மேலும் இ-ட்ரான் என்ற வணிகப் பெயரில் பெட்ரோலில் இயங்கும் காா்களையும் அந்த நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, இந்தியாவின் முக்கிய காா் தயாரிப்பாளா்களான மாருதி சுஸுகியும், டாடா மோட்டாா்ஸும் அடுத்த மாதம் முதல் தங்களது காா்களின் விலையை உயா்த்துவதாக அறிவித்துள்ளன.

Tags : Audi car
ADVERTISEMENT
ADVERTISEMENT