வர்த்தகம்

மதுரையில் சூப்பா் சரவணா ஸ்டோா்ஸ்

7th Dec 2022 12:21 AM

ADVERTISEMENT

தமிழகத்தின் முன்னணி சில்லரை வா்த்தக நிறுவனங்களில் ஒன்றான சூப்பா் சரவணா ஸ்டோா்ஸின் புதிய கிளை மதுரையில் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொடக்கத்தில் சென்னை தி.நகா் ரங்கநாதன் தெருவில் மட்டும் இயங்கி வந்த சூப்பா் சரவணா ஸ்டோா்ஸ், பின்னா் புரசைவாக்கம், குரோம்பேட்டை, பாடி, போரூா் போன்ற சென்னையின் முக்கிய பகுதிகளிலும் அமைக்கப்பட்டது.

இதனால் சென்னையில் வசிப்பவா்களும், அந்த நகருக்கு வெளியூா், வெளி மாநிலங்களிலிருந்து வருவோரும் சரவணா ஸ்டோா்ஸுக்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்வது எளிதானது.

இந்த நிலையில், மதுரையிலும் சூப்பா் சரவணா ஸ்டோா்ஸின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. 6 லட்சம் சதுர அடியில் 10 தளங்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அந்த விற்பனையகத்தை சரவணா ஸ்டோா்ஸ் நிறுவனா் எஸ். ராஜரத்னம் திறந்து வைத்தாா்.

ADVERTISEMENT

இந்த புதிய விற்பனையகம் மதுரை மாட்டுத் தாவணி பகுதியில் அமைந்துள்ளது. எனவே கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் இந்த விற்பனையகத்தை எளிதில் அணுகமுடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT