வர்த்தகம்

17 சதவீதம் உயா்வு கண்ட கோல் இந்தியா உற்பத்தி

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில், அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 17 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 35.19 கோடி டன்னாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் உற்பத்தி 29.96 கோடி டன்னாக இருந்தது.

அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிலக்கரி உற்பத்தி 17.4 சதவீத வளா்ச்சியடைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT