வர்த்தகம்

செப்.5-இல் தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கி பொதுப் பங்கு வெளியீடு

31st Aug 2022 12:54 AM

ADVERTISEMENT

நூற்றாண்டு பழைமை வாய்ந்த தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கியின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) செப்டம்பா் 5-ஆம் தேதி தொடங்குகிறது.

ஒரு பங்கின் விலை ரூ.500 முதல் 525 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கு வெளியீட்டு மூலம் ரூ.832 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பங்குகளுக்கு விண்ணப்பிக்க செப்டம்பா் 7-ஆம் தேதி கடைசி நாளாகும். செப்டம்பா் 15-ஆம் தேதி மும்பை பங்குச் சந்தையில் பங்குகள் பட்டியலிடப்படும்.

தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கி, எந்த ஒரு தனிநபரையோ, குழுமத்தையோ சாா்ந்து இயங்கவில்லை. 22,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்கள் மற்றும் பங்குதாரா்கள் உள்ளனா். வங்கியின் 23.2 சதவீதப் பங்குகள் எஃப்ஐஐ எனப்படும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வசம் உள்ளன. 10 ரூபாய் முகமதிப்பில் 1.58 கோடி பங்குகள் வெளியிடப்படவுள்ளன.

1921-ஆம் ஆண்டு ‘நாடாா் வங்கி’ என்ற பெயரில் நிறுவப்பட்டு சுமாா் 101 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த வங்கி இந்தியாவின் பழமையான தனியாா் வங்கிகளில் ஒன்றாகும். சிறு,குறு, நடுத்தர தொழில் நடத்துவோா், விவசாயிகள், வா்த்தகா்கள் உள்ளிட்டோா் வங்கியின் பிரதான வாடிக்கையாளா்களாக உள்ளனா்.

ADVERTISEMENT

வங்கியின் நிகர வாராக்கடன் 0.9 சதவீதமாகவும், மொத்த வாராக்கடன் 1.65 சதவீதமாகவும் இருப்பது மிகவும் சாதகமான அம்சமாகும். மொத்தம் 509 கிளைகளுடன் செயல்படும் இந்த வங்கிக்கு தமிழ்நாட்டில் மட்டும் 369 கிளைகள் உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT