வர்த்தகம்

மஹிந்திராவின் புதிய 3 சக்கரமின் சரக்கு வாகனம் அறிமுகம்

31st Aug 2022 12:20 AM

ADVERTISEMENT

மஹிந்திரா குழுமத்தைச் சோ்ந்த மஹிந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் (எம்இஎம்எல்), மின்சாரத்தில் இயங்கக் கூடிய தனது புதிய 3 சக்கர சரக்கு வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘ஸோா் கிராண்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வாகனத்தின் விலை ரூ.3.60 லட்சமாக (பெங்களூரு காட்சியக விலை) நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸோா் கிராண்ட் வாகனங்களை வாங்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ், மெஜந்தா இவி சொல்யூஷன்ஸ், எம்ஓஇவிங், இவிநௌ, எலோ இவி, ஸிங்கோ ஆகிய சரக்குப் போக்குவரத்து நிறுவனங்களுடன் இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று எம்இஎம்எல் தெரிவித்துள்ளது.

Tags : Mahindra
ADVERTISEMENT
ADVERTISEMENT