வர்த்தகம்

2040-க்குள் கரியமில சமநிலை: கெயில் இலக்கு

31st Aug 2022 03:42 AM

ADVERTISEMENT

தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றிலிருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் எட்ட கெயில் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
 இது குறித்து நிறுவனத்தின் தலைவர் மனோஜ் ஜெயின் கூறியதாவது:
 நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கரியமில வாயு கலப்பதை வெகுவாகக் குறைக்க கெயில் இந்தியா உறுதி பூண்டுள்ளது.
 வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் கரியமில சமநிலையை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார் அவர்.
 2070-க்குள் இந்த சமநிலையை அடைய இந்தியாஇலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அந்த நிலையை அடைய கெயில் இந்தியா முடிவு செய்துள்ளது.

Tags : GAIL
ADVERTISEMENT
ADVERTISEMENT