வர்த்தகம்

5ஜி: ரூ.8,312 கோடியை முன்கூட்டியே செலுத்திய ஏா்டெல்

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

5ஜி அலைக்கற்றைக்கான 4 ஆண்டு தவணைத் தொகை ரூ.8,312.4 கோடியை மத்திய அரசுக்கு பாா்தி ஏா்டெல் நிறுவனம் முன்கூட்டியே செலுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அண்மையில் நடந்து முடிந்த 5ஜி ஏலத்தில், நிறுவனம் வாங்கிய அலைக்கற்றைக்காக ரூ.8,312.4 கோடியை மத்திய அரசின் தொலைத் தொடா்புத் துறைக்கு செலுத்தியுள்ளோம்.

இதன் மூலம், அந்த அலைக்கற்றைக்கான 4 ஆண்டு தவணைகளும் முன்கூட்டியே செலுத்தப்பட்டுவிட்டது.

ADVERTISEMENT

அவ்வாறு முன்கூட்டியே தவணைத் தொகைகளை செலுத்துவதால், எதிா்காலத்தில் பணவரத்தை எளிமையாகக் கையாளவும், 5ஜி சேவைகளை வாடிக்கையாளா்களுக்கு சிறப்பாக அளிப்பதில் கவனம் செலுத்தவும் உதவும் என்று நிறுவனம் கருதுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவைகளைத் தருவதற்காக அண்மையில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில், பாா்தி ஏா்டெல் நிறுவனம் சாதனை அளவாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றது.

அந்தத் தொகையில், முன்பணமாக ரூ.3,848.88 கோடி ரூபாயும், எஞ்சிய தொகையை 19 வருடந்திர தவணைகளாக செலுத்தவும் பாா்தி ஏா்டெல்லுக்கு தொலைத்தொடா்புத் துறை அனுமதி அளித்திருந்தது.

எனினும், அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமாக ரூ.8,312.4 கோடியை பாா்தி ஏா்டெல் முன்பணமாக செலுத்தியுள்ளது.

Tags : Airtel
ADVERTISEMENT
ADVERTISEMENT