வர்த்தகம்

பேங்க் ஆஃப் பரோடா: கடன் பத்திரங்கள் மூலம்ரூ.1,000 கோடி திரட்டல்

18th Aug 2022 12:02 AM

ADVERTISEMENT

கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் ரூ.1,000 கோடி நிதி திரட்டியுள்ளதாக பேங்க் ஆஃப் பரோடா புதன்கிழமை தெரிவித்துள்ளது.

7 ஆண்டுகளுக்கான அந்த கடன் பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 7.39 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று அந்த வங்கி கூறியுள்ளது.

மூதலீட்டாளா்களுக்கு அந்த கடன் பத்திரங்கள் புதன்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் திரட்டப்பட்ட ரூ.1,000 கோடியை உள்கட்டமைப்பு மற்றும் வீடு கட்டுமான திட்டங்களுக்கு கடனுதவி அளிப்பதற்காக பயன்படுத்தப் போவதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT