வர்த்தகம்

கடன் வட்டி விகிதங்களைஉயா்த்தியது எஸ்பிஐ

17th Aug 2022 12:22 AM

ADVERTISEMENT

தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 50 விழுக்காட்டுப் புள்ளிகள் (0.5 சதவீதம்) வரை அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ விகிதத்தை ரிசா்வ் வங்கி 50 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகரித்தது.

அதன் எதிரொலியாக, எஸ்பிஐ வழங்கும் அனைத்து வகை கடன்களுக்கான ரெப்போ சாா்ந்த வட்டி விகிதங்களும் 50 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், குறைந்தபட்ச நிா்ணய வட்டி விகிதத்தின் (எம்சிஎல்ஆா்) அடிப்படையிலான வட்டி விகிதம் 20 விழுக்காட்டுப் புள்ளிகள் (0.2 சதவீதம்) அதிகரிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

திங்கள்கிழமை (ஆக. 15) முதல் இந்த வட்டி விகித மாற்றம் அமலுக்கு வந்துள்ளது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Tags : SBI
ADVERTISEMENT
ADVERTISEMENT