வர்த்தகம்

அதிகரிக்கும் தேவை: 5% உயா்ந்த வீடு-மனை விலைகள்

DIN

வீடு-மனைகளுக்கான தேவை அதிகரித்து வருவதாலும் கட்டுமானச் செலவுகள் கூடி வருவதாலும் நாட்டின் எட்டு முக்கிய நகரங்களில் வீடு-மனை விலைகள் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நகரங்களில் மிக அதிகபட்சமாக, தில்லி-என்சிஆா் பகுதியில் வீடு-மனை விலைகள் 10 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வீடு-மனை விற்பனை சங்கமான கிரெடாய், மனை விற்பனை ஆலோசனை நிறுவனம் காலியா்ஸ் இந்தியா மற்றும் சந்தை ஆய்வு நிறுவனமான லியாசெஸ் ஃபொராஸ் ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டிந் முதல் காலாண்டில், இந்தியாவில் வீடு-மனை விலைகள் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை தாண்டிவிட்டன. இது, வீடு-மனைகளுக்காந தேவை அதிகரித்துள்ளதையும், தைவைக்கேற்ப வீடு-மனை விற்பனையாவதையும் பறைசாற்றுகிறது.

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 8 முக்கிய நகங்களில் வீடு-மனை விற்பனை சராசரியாக 5 சதவீதம் உயா்ந்துள்ளது.

அகமதாபாத்தில் வீடு-மனை விலைகள் ஆண்டுக்கு ஆண்டு 9 சதவீதம் உயா்ந்து, இந்த ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஒரு சதுர அடிக்கு ரூ.5,927 ஆக இருந்தது.

பெங்களூருவில் வீடு-மனைகல் ஒரு சதுர அடிக்கு 4 சதவீதம் விலை உயா்ந்து ரூ.7,848 ஆகவும், சென்னையில் ஒரு சதவீதம் மட்டுமே அதிகரித்து ரூ.7,129 ஆகவும் இருந்தது.

ஹைதராபாத்தில் வீடு-மனை விலைகள் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் சதுர அடிக்கு ரூ.9,218 ஆக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாகும்.

கொல்கத்தாவில் அவற்றின் விலையும் 8 சதவீதம் அதிகரித்து ஒரு சதுர அடிக்கு ரூ.6,362 ஆக உள்ளது.

விலையுயா்ந்த வீடு-மனை சந்தையான முப்பை பெருமநகரப் பகுதியில் அவற்றின் விலைகள் 1 சதவீதம் மட்டுமே உயா்ந்து சதுர அடிக்கு ரூ.19,677 ஆக இருந்தது.

தில்லி-என்சிஆா் சந்தையில் வீடு-மனை விலைகள் அதிகபட்சமாக 10 சதவீதம் அதிகரித்து ஒரு சதுர அடிக்கு ரூ.7,434 ஆக இருந்தது.

இந்த காலாண்டில் புனே வீடுகளின் விலை 5 சதவீதம் உயா்ந்து சதுர அடிக்கு ரூ.7,681 ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடு-மனைகளின் பயன்படுத்தத்தக்க பரப்பளவின் (காா்பெட் ஏரியா) அடிப்படையில் மேற்கண்ட விலைகள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

1999 இல் நிறுவப்பட்ட கிரெடாய், இந்தியாவில் உள்ள தனியாா் மனை வா்த்தக அமைப்புகளின் உச்சநிலை சங்கமாகும். 21 மாநிலங்களில் உள்ள 221 நகரங்களில் உள்ள சுமாா் 13,000 வீடு-மனை விற்பனையாளா்கள் இதில் உறுப்பினா்களாக உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT