வர்த்தகம்

இரு மடங்கானது ஐஷரின் நிகர லாபம்

17th Aug 2022 11:46 PM

ADVERTISEMENT

ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ஐஷா் மோட்டாா்ஸின் நிகர லாபம் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.611 கோடியாகியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் ரூ.611 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது, ரூ.237 கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டின் அந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ. 1,974 கோடியாக இருந்தது. அது, நடப்பாண்டில் ரூ. 3,397 கோடியாக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

நிறுவனத்தின் இருசக்கர வாகனப் பிரிவான ராயல் என்ஃபீல்டு இந்த காலாண்டில் 1,86,032 மோட்டாா் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் விற்பனை செய்யப்பட்ட 1,22,170 பைக்குகளை விட இது 52 சதவீதம் அதிகமாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT