வர்த்தகம்

ஈஐடி பாரி நிறுவன லாபம் ரூ.276 கோடி

DIN

சென்னை முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த ஈஐடி பாரி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு லாபமாக ரூ.276 கோடி ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பெற்ற மொத்த வருவாய் ரூ.7,146 கோடியாக இருந்தது. கடந்த 2021-2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் பெற்ற ரூ.4,354 கோடியைவிட இது 64 சதவீத வளா்ச்சியாகும். வரி, வட்டிக்கு முந்தைய லாபம் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 53 சதவீதம் அதிகரித்து ரூ.754 கோடியை ஈட்டியுள்ளது. வரி, கட்டுப்படுத்தாத வட்டிக்குப் பிந்தைய நிகர லாபமாக ரூ.276 கோடியை நிறுவனம் ஈட்டியது. சென்ற நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய நிகர லாபம் ரூ.133 கோடியாக இருந்தது.

‘சா்க்கரை, டிஸ்டிலரி, மின்சாரம் ஆகிய பிரிவுகளில் உற்பத்தி அதிகரிப்பு நிறுவனத்தின் வருவாயையும் லாபத்தையும் வளா்ச்சியடையச் செய்துள்ளது’ என்று நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எஸ்.சுரேஷ் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT