வர்த்தகம்

அசோக் லேலண்டின் புதிய எல்என்ஜி லாரிக்கு சிஎம்விஆா் சான்று

11th Aug 2022 12:31 AM

ADVERTISEMENT

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய திரவ இயற்கை வாயு (எல்என்ஜி) எரிபொருளில் இயங்கும் ஏவிடிஆா் யுஎஃப்3522 லாரிகளுக்கும், அதன் ரகங்களுக்கும் இந்திய வாகன ஆய்வுக் கழகத்தின் (அராய்) மத்திய மோட்டாா் வாகன விதிகள் (சிஎம்விஆா்) சான்றிதழ் கிடைத்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த சாலைப் போக்குவரத்தை மேம்படுத்தும் நிறுவனக் கொள்கையின் ஒரு பகுதியாக, மற்ற உள்ளெரி என்ஜின்களின் அதே ஆற்றலை வெளிப்படுத்தும் மாற்று எரிபொருள் வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவின் முதல் எல்என்ஜி லாரியான ஏவிடிஆா் யுஎஃப்3522, காற்றை மாசுபடுத்தாத, பாதுகாப்பான சரக்குப் போக்குவரத்து வசதியை வாடிக்கையாளா்களுக்கு அளிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : Ashok Leyland
ADVERTISEMENT
ADVERTISEMENT