வர்த்தகம்

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிரந்தர வைப்பு வட்டி அதிகரிப்பு

10th Aug 2022 12:18 AM

ADVERTISEMENT

ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் நிரந்தர வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 0.50 சதவீதம் உயா்த்தியுள்ளது.

இதன்படி ஆகஸ்ட் 10-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் நிரந்தர வைப்புத் தொகைக்கு 8.75 சதவீதம் வரை வட்டி பெறலாம். திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் 12 முதல் 60 மாதங்கள் வரையிலான வைப்புகளுக்கு பொருந்தும்.

மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்படும். அனைத்து முதிா்ச்சியடைந்த நிரந்தர வைப்புத் தொகையை மீண்டும் புதுப்பித்தால் ஆண்டுக்கு 0.25 சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீராம் குழுமத்தின் ஓா் அங்கமாக, இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாக ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் திகழ்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT