வர்த்தகம்

2022-23 முதல் காலாண்டில்பொதுத்துறை வங்கிகளின் லாபம் 9.2% அதிகரிப்பு

10th Aug 2022 12:57 AM

ADVERTISEMENT

நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 12 பொதுத்துறை வங்கிகளும் கூட்டாக சுமாா் ரூ.15,306 கோடி லாபம் ஈட்டியுள்ளன. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும்.

கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் பொதுத் துறை வங்கிகள் ரூ.14,013 கோடி லாபம் ஈட்டியிருந்தன. நிகழாண்டு 9.2 சதவீதம் அதிகரித்து ரூ.15,306 கோடி லாபம் ஈட்டியுள்ளன. இருப்பினும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய மூன்று வங்கிகளின் லாப வீதம் 7 முதல் 70 சதவீதம் வரை சரிந்தது.

பாரத ஸ்டேட் வங்கியின் லாபம் ரூ.6,068 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் லாபம் நிகழாண்டு குறைந்தபோதிலும், ஒட்டுமொத்த பொதுத்துறை வங்கிகள் ஈட்டிய லாபத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் பங்களிப்பு 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர பிற 9 வங்கிகளின் லாப வீதம் 3 முதல் 117 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. புணேயை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா முதல் காலாண்டில் ரூ.452 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் ரூ.208 கோடியாக பதிவானது.

ADVERTISEMENT

பேங்க் ஆஃப் பரோடாவின் லாபம் 79 சதவீதம் அதிகரித்து ரூ.2,168 கோடியாக பதிவாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.1,209 கோடியாக இருந்தது. இதேபோல, பேங்க் ஆஃப் இந்தியா ரூ.2,168 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT